Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

குறுக்க வந்த கௌசிக்கால் பின்வாங்கும் தயாரிப்பு நிறுவனம். போட்ட பிளான் எல்லாம் புஸ்சுன்னு போச்சே.. !!

 தற்போது கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்கள் ஒவ்வொன்றாக தியேட்டர்களிலும் OTTயிலும்  ரிலீஸ் ஆகி வருகிறது. அதில் ஒரு மாஸ் ஹீரோ படம் ஒன்று வேற லெவலில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதில் சில அதிருப்திகள் இருந்தாலும் அந்த படம் அவருடைய ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்கின்றன சினிமா வட்டாரங்கள்.

மேலும் இதில் அந்த நடிகரும் இறங்கி பல ரிஸ்க்குகள் எடுத்து பல விஷயங்களை செய்திருக்கிறார். ஒருபுறம் இது இப்படி இருக்க அந்த வெளிச்ச நடிகர் மலை போல் நம்பி அந்த இருந்த பிரம்மாண்ட படத்துக்கு தற்போது சிக்கல் ஏழுந்துள்ளது. அவர் அடித்து பிடித்து சில மாதங்களுக்கு முன்பே அந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார்.

அப்போ தான் யாரும் தனக்கு எதிரா போட்டிக்கு வர மாட்டாங்க என தப்பு கணக்கு போட்டு விட்டார் அந்த வெளிச்ச நடிகர். ஏனென்றால் தற்போது  தமிழ் சினிமாவின் வேறு ஒரு உச்ச நடிகர் அதே நாளில் தன் படத்தை வெளியிட நாள் குறித்து தேதியை வெளி விட்டார்.

இத்தகைய சூழ்நிலையில் செய்வதறியாது திகைத்துப் போய் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்து இருக்கிறது அந்த பிரம்மாண்ட டீம். இவ்வளவு செய்தும் மண்டை மேல இருந்த கொண்டைய மரணறந்துட்டோமே என வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதனால் அந்த வெளிச்ச நடிகரும் என்ன செய்யலாம் என அனைவரையும் கூட்டி ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.

ஒரு புறம் துணிஞ்சு இறங்கலாம் நடக்கிறது நடக்கட்டும் என வந்தவர்கள் கூற. ஆனால் தயாரிப்பு நிறுவன தரப்பு தன வசூலை சிந்தாமல் சிதறாமல் மொத்தமாக அல்ல பிளான் செய்து உள்ளது.

மேலும் அந்த கூட்டத்தில்  உச்ச நடிகர் சத்தம் இல்லாமல் என்ட்ரி கொடுத்ததால் தங்களது பட ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாமா என்ற யோசனையில் தயாரிப்பாளர் அனைவரிடமும் யோசனை கேட்டுள்ளாராம். ஆனால் தேதியை தள்ளி வைப்பதற்கு அந்த நடிகர் அதற்கு சம்மதித்தால் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாக கூடும் என தெரிவித்துள்ளனர். அதனால் இந்த இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதும் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள்.

Post a Comment

0 Comments

Ad Code