மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் கல்யாண் நகர் என்ற இடத்தில் கடந்த 4 நாட்களாக 14 வயது சிறுவன் தனது தாயின் சடலம் அருகே அமர்ந்திருந்தான். மூடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியபோது அக்கம்பக்கத்தினர் பதறிப்போய் கதவைத் திறந்து உள்ளே இருந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
44 வயதான சில்வியா டேனியல் மற்றும் அவரது 14 வயது மகன் ஆல்வின் டேனியல் ஆகியோர் குடியிருப்பில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் சில நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் மகன் யாரிடமும் எதுவும் சொல்லாமல், கடந்த நான்கு நாட்களாக தாயின் சடலத்தின் அருகே அமர்ந்திருந்தான். கட்டடத்தின் வாட்ச்மேன் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டின் கேட்டை திறந்து பார்த்தபோது, குடியிருப்புக்குள் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. அந்த பெண்ணின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனைவரும் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த பெண்ணின் மகன் ஒல்வின் டேனியல், தனது தாய் ஏதோ நோய் காரணமாக உயிரிழந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பெண்ணின் மரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், அந்த பெண்ணின் கணவர் மற்றும் வேறு எந்த முறைகேடு குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தாய் இறந்த பிறகு அந்த சிறுவன் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவனும், யாரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் தனது அம்மாவின் சடலத்தின் அருகில் 4 நாட்களாக அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)

0 Comments