ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளிவரவிருக்கும் 'ராமாயணம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.835 கோடி என கூறப்படுகிறது. ராமாயணம் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அனேகமாக சில பேட்ச் ஒர்க் பாக்கி இருக்கும். அதே நேரத்தில் இந்த படத்தின் VFX வேலைகளும் தொடங்கியுள்ளன.

'ராமாயணம் முதல் பாகம்' படத்தின் படப்பிடிப்பிற்காக 12 செட்கள் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் இந்த செட்களை அப்புறப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதே ரிப்போர்ட்டில் இயக்குனர் நித்தேஷ் திவாரி இனி 'ராமாயணம்' படத்தை ட்ரைலாஜியாக கொண்டு வரப்போவதில்லை என்றும், இரண்டு பாகங்களாக முடிக்கப்படும் என்றும் முடிவு செய்துள்ளதாகவும் எழுதப்பட்டுள்ளது.

'ராமாயணம்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் 600 நாட்களுக்கு நீடிக்குமா?. 'ராமாயணம்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு 600 நாட்கள் வேலை தேவைப்படும் என்று முன்பு செய்திகள் வந்தன. எனவே, 2027ல் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்ததற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. 'ராமாயணம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஊடகங்களில் கூறப்பட்டாலும், இயக்குநர் நித்தேஷ் திவாரியோ அல்லது படக்குழுவினரோ இதுபற்றி உறுதிப்படுத்தவில்லை.